ஊடக நெறியாளர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டால் என்ன?

சிறப்புக்கட்டுரை: நம்பி நாராயணன் (ஆசிரியர்,  ஒரே நாடு மாத இதழ்)

முகநூல் “பிரபலங்களில்” ஒன்று, “வாசுகி பாஸ்கர்” என்ற ஐ.டி.

இதில் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள், இந்திய தேசியத்துக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்படுவது   வழக்கம்.

“Ø கிறிஸ்தவன் வந்துதாண்டா பாடம் சொல்லிக் கொடுத்தான், மருத்துவம் சொல்லிக் கொடுத்தான், சீருடை கொடுத்தான், இங்கிலீஷ் கொடுத்தான்,உங்க வேதபாடசாலையால எட்டணா வேர்க்கடலை இந்த சமுதயாத்துக்குப் புண்ணியம் இல்ல.

Ø சி,ம்.சி. மருத்துவமணை கிறிஸ்தவ மெசினரியாம். ஆமா, இன்னா இப்போ அதுக்கு

Ø  இந்தியா ஒரு மோசமான நாடு. கருத்துச் சுதந்திரத்தில் பிற்போக்கான நாடு. கல்வியும் படிப்பும் எழுத்தும் எழுத்தாளர்களும் அவர்கள் எழுதிய சமூகமும் வரலாறும் அதைமையப்படுத்தி எழுந்த புரட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா எச்சில் துப்பக் கூட அருகதையற்ற நாடு

Ø  பார்பனீயத்தின் எந்த அறிவுரையும் இதுவரை இந்த சமூதாயதுக்கு புண்ணியப்பட்டதில்லை. அதனால, மூடிக்கிட்டு கிளம்புங்கடா”- இவை எல்லாம் அவரது பதிவுகளுக்கு சில உதாரணங்கள்.

இவை ஏற்கத்தக்க கருத்துக்கள் இல்லை என்பது ஒருபுறம்.

இன்னொரு புறம்… இந்த வாசுகி பாஸ்கர் யார் என்று இயல்பிலேயே பலருக்குளும்கேள்வி எழுந்தது உண்மை.

ஒரு கட்டத்தில், “நானே அந்த வாசுகி பாஸ்கர்” என்று வெளிப்பட்டார் நெல்சன் சேவியர்.

இவர், நியூஸ் 7 தொலைக்காட்சி சானலின் இணை ஆசிரியர். அதோடு, அந்த தொ.கா. விவாத நிகழ்ச்சிகளில் நெறியாளரும்கூட.

இது குறித்து எனக்கு இரு கேள்விகள் உண்டு.

முகநூல் போன்ற சமூகவலைதளங்களில் போலி கணக்கு துவங்கி பிறரை வசை பாடும் துர்க்குணத்தோர் பலர் உண்டு. இதை அனைத்துத் தரப்பினரும் கண்டிக்கவே செய்கிறார்கள். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தைரியமற்றவர்கள் என்பதோடு, தரம் தாழ்ந்து எழுதுபவர்களும் (பெரும்பாலும்) இதுபோன்ற போலி கணக்காளர்கள் – ஃபேக் ஐடிக்கள்- தான் என்பது அனைவரும் அறிந்தது.

இப்படி சாதாரண  ஆட்களே தங்கள் முகம் மறைத்து ஃபேக் ஐடிக்களாக உலா வருவது கண்டிக்கத்தக்கது என்கிற நிலையில், ஒரு ஊடகத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் இப்படி போலி கணக்கில் தன் மனம் போன போக்கில் எழுதிவந்தது முறைதானா?

இப்போது எனது அடுத்த கேள்விக்கு வருகிறேன்.

இந்த நெல்சன் சேவியர் என்பவர் தான் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் இந்து – இந்திய விரோத கருத்துக்களை வெளிப்பட  ஊக்கமளிப்பவர்.

தேசியக் கொடியை எரித்த திலீபன் என்பவரை, வேறு சில சான்றோர்களுடன் அழைத்து விவாதத்தில் பங்குகொள்ளச் செய்தார். விவாதத்தில்  அந்த திலீபன் தேச விரோத கருத்துக்களை உதிர்த்தார். அதை நெல்சன் அனுமதித்ததோடு, ரசித்துக்கேட்டார்.

இன்னொரு விவாதத்தில் நாராயணன் திருப்பதியை, மதிமாறன் என்பவர் “பார்ப்பனன், பார்ப்பனன்” என்று வசைபாட, தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் நெல்சன்.

இதற்கு முன்பு நேரடியான ஒரு அனுபவமே எனக்கு உண்டு.

நம்பி நாராயணன்

நானும் மனுஷ்யபுத்திரனும் கலந்து கொண்ட ஓர் விவாதத்தில் மனுஷ்யபுத்திரன் பகவான் கிருஷ்ணரை பெண்களோடு இணைத்து மட்டமாக விமர்சிக்க, நெல்சன் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கை பார்த்தார். அப்போது நான்,  கிருஷ்ணரை விமர்சித்தால் நான் முகமது நபியை விமர்சிக்க வேண்டியிருக்கும் என்று கூறினேன். அதன் பிறகே விவாதம் மீண்டும் நெறிக்கு வந்தது.

நெல்சனின் ஒரு சார்பு நிலை,  நியூஸ் 7 சானல் நிர்வாகிகளுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

இவ்வளவு இந்திய வெறுப்பும், இந்து பார்ப்பனீய வெறுப்பும் உள்ள ஒருவரால் நடுநிலையோடு எப்படி விவாதம் நடத்த முடியும் என அந்த ஊடகம் கருதுகிறது ? அல்லது நியூஸ் 7 ஊடகமே இந்து விரோத களத்திற்காக நிறுவப்பட்டதுதானா என்ற ஐயம் ஏற்படுகிறது.

இதோ… எனது  இரண்டாவது கேள்விக்கு வந்துவிடுகிறேன்.

விவாத்திற்கு வரும் கட்சிக்காரர்களின் பெயருக்கும் பின்னால் அவர் சார்ந்த கட்சியின் பெயரை சொல்வது போல நெறியாளரின் பெயருக்குப் பின்னால அவர் சார்ந்த  கோட்பாட்டையும் சொல்லிவிட்டால் என்ன?

அதாவது,  நெறியாளரின் பண்பிற்கேற்ப திராவிட சித்தாந்தவாதி, கம்யூனிஸ சிந்தாந்தவாதி, நக்ஸல் சிந்தாந்தவாதி, எவென்சலிக்கல் சிந்தாந்தவாதி, பிரிவைனை சிந்தாந்தவாதி என்று சொல்லிவிடலாமே?

இப்படிச் செய்துவிட்டால், பார்வையாளர்களுக்கும் கூட விவாதத்தின் தன்மை புரிந்து விடும்! இதுவே சரியான சரியான நடுநிலையாக இருக்கும்!

ஊடகங்கள் செய்யுமா?

Leave a Reply

Your email address will not be published.