வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நீதிமன்றம்

டெல்லி:

ன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையின் மெத்தனம்தான் வன்முறைக்கு காரணம் என்று  என்று வழக்கின் விசாரணையின்போது, டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி முரளிதரன் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.  இந்த வன்முறை டெல்லியின்  ஜாஃப்ராபாத், மவ்ஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக், கர்தம்பூரி, தயால்பூர் உள்பட பல இங்களில் பரவி வருகிறது. இந்த வன்முறைக்கு இதுவரை 20 பேர் பலியான நிலையில், ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்லியின் யமுனா விஹார், கோகுல்புரி, ஜோக்ரி என்கிளேவ், ஷிவ் விஹார் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறையில் இரு குழுக்களும் கற்கள், பாட்டில்களை வீசிக் தாக்கிக் கொண்டனர்.மேலும், வாகனங்களுக்கு தீ வைப்பதும், பெட்ரோல் நிலையங்களைக் கொளுத்துவதும், வீடு புகுந்து தாக்குவதும் என கட்டுகடங்காத வன்முறையாக மாறி உள்ளது.

ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், அரசியல் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியபோதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியவர், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கையின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்படி பேசும் எந்த வீடியோவையும் பார்க்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி முரளிதரன்,  நாடு முழுவதும் பார்த்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா ? இங்கு ஒளிபரப்பி காட்டவா என்று காவல்துறைக்கு கேள்வி விடுத்தவர், காவல்துறையின் மெத்தனம்தான் வன்முறைக்கு காரணம் என்று கடுமையாக விமர்சித்தார்.

டெல்லி வன்முறைக்கு பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, பிரவேஷ் வர்மா எம்.பி காரணம்….