அதிமுக கூட்டத்தில் 5 அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன்?

சென்னை:

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து 5 அமைச்சர்கள் விளக்கமளித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை தொடர்ந்து சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, பாஸ்கரன் ஆகிய 5 பேர் பங்கேற்கவில்லை.

அமைச்சர்கள் பங்கேற்காதது பெரும் சந்தேகங்களையும், விமர்சனங்களையும் கிளப்பியது. இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து கட்சி தலைமைக்கு அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அதில், ‘சொந்த ஊர்களில் இருந்தபோது, திடீரென ஆலோசனை கூட்ட அறிவிப்பு வெளியானது. ‘திடீர்’ அழைப்பால் உடனடியாக புறப்பட்டு வந்து கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளனர்.