மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் அளிக்க தாமதம் ஏன்?  : தமிழக அரசு விளக்கம்

--

நீ்ட் தேர்வு குறி்து மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்பதால் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்படவில்லை. என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவ, பொறியியல், கலை படிப்புகளுக்கு கல்வியாண்டுக்கு முன்பாகவே விண்ணப்பங்கள்அளிக்கப்பட்டுவிடும். தற்போது பொறியியல் மற்றும் கலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மருத்து படிப்புக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படவில்லை. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராதாகிருஷ்ணன்

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சற்று முன்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், “மற்ற மாநிலங்களுக்கு கடந்த முறை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படாவிட்டாலும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை தமிழகத்துக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. இங்கு பல்லாயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள்.

ஆனாலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டமுன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகவேதான் இன்னமும் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் அளிக்கவில்லை. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.