டில்லி:

ரஃபேல் ஒப்பந்தம், அமித் ஷா மகனின் தொழில் குறித்து பிரதமரிடம் கேள்வி கேட்காதது ஏன்? என்று ராகுல் காந்தி நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அனைத்திந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் அங்கு இருந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஒரு கட்டத்தில்குறிக்கிட்டுப் பேசிய ராகுல், ‘‘என்னிடம் நீங்கள் நிறைய கேள்விகளைக் கேட்கிறீர்கள். நானும் அதற்கு பதில் சொல்கிறேன். ஆனால், ஏன் நீங்கள் யாருமே ரஃபேல் ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடியிடம் கேட்பதில்லை. ஒரே ஒரு தொழிலதிபர் பலனடைய வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த ஒப்பந்தமுமே மாற்றப்பட்டதே? அமித் ஷா மகனின் தொழில் குறித்தும் ஏன் கேள்வி கேட்பதில்லை? இதுதான் நான் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி’’ என்றார்.