மும்பை:

டந்த ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் கலவரத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டளர்கள் மீதான ஜாமின்  மனு விசாரணையின்போது, சமூக ஆர்வலர் ஒருவரிடம் இருந்து பிரபல நூலான  லியோ டால்ஸ்டாயின் “போர் மற்றும் அமைதி”  (war and peace)  கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தனிநீதிபதி,  இது “போர் மற்றும் அமைதி” என்ற புத்தகத்தை,    “ஆட்சேபனைக்குரிய பொருள்”  என்றும், இதை ஏன் வீட்டில் வைத்திருந்தார் என்பதை விளக்குமாறு கேட்டுக்கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த Leo Tolstoy’s “War and peace” என்ற புத்தகத்தை இந்திய பிரதமர் மோடி படிக்கும் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leo Tolstoy’s “War and peace” என்ற புத்தகத்தை படித்த மோடியும்  பிரிவினை வாதியா என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

பீமா கொரேகான் போரின் 200 வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் நிகழ்ச்சி ஆண்டு (2018)  ஜனவரி மாதம்  மகாராஷ்டிரத்தில் பீமா – கோரேகாவில்  எல்கார் பரிஷத் பேரணியில் நடை பெற்றது. இதில் நினைவு அஞ்சலி செலுத்தச் சென்றவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்ற நிலையில் மாநிலம் முழுவதும்  பெரும் கலவரம் வெடித்தது.

அதைத்தொடர்ந்து புனே மாவட்டத்தில் பீமா-கோரேகான் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாதிக்கலவரம் மூண்டது. இதில்ஒருவர் கொல்லப்பட்டார், ஏராளமானோர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து  மாநிலம் முழுவதும்  பதற்ற நிலை ஏற்பட்டது. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எற்படுத்திய நிலையில்,  அரசியல் ஆதாயத்துக்காக சமுதாய ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களான ஷோமா சென், ரோனா வில்சன், சுதா பரத்வாஜ், அருண் ஃபெரீரா, மற்றும் கவுதம் நவ்லகா  கைது செய்யப்பட்டனர். இவர்கள்மீது போராட்டத்தை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கலவரம் தொடர்பாக மாநில முதல்வர்  தேவேந்திர பட்நாவிஸ்  நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின்  வழக்கு விசாரணை மும்பை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி சாரங் கோட்வால் தலைமையிலான தனி அமர்வில் நடைபெற்று வருகிறது.

வழக்கின் நீதிமன்ற விசாரணையின்போது,  இந்த வழக்கை விசாரிக்கும் புனே காவல்துறையினர், இந்த புத்தகம் மும்பையில் உள்ள கோன்சால்வ்ஸின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், “மிகவும் குற்றச்சாட்டுக்குரிய சான்றுகளின்” ஒரு பகுதி என்று குற்றச்சாட்டு சுமத்தியது. அது தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தது.

அதில் கபீர் கலா மன்ச் வெளியிட்ட ‘ராஜ்ய தமன் விரோதி’, ‘மார்க்சிஸ்ட் காப்பகங்கள்’ மற்றும் ‘ஜெய் பீமா தோழர்’; புத்தகங்கள் ‘போர் மற்றும் அமைதி’, ‘மாவோயிஸ்டுகளைப் புரிந்துகொள்வது’ மற்றும் ‘ஆர்.சி.பி விமர்சனம்’ மற்றும் தேசிய ஆய்வு வட்டத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை யின் பிரதிகள் போன்றவற்றையும் சமர்ப்பித்தது.

இதை ஆய்வு செய்த நீதிபதி,  “யுத்தமும் சமாதானமும்” வேறொரு நாட்டில் ஒரு போரைப் பற்றியது, அதே நேரத்தில் ‘போர் மற்றும் சமாதானம்’ என்பது வேறொரு நாட்டில் ஒரு போரைப் பற்றியது. ‘போர் மற்றும் அமைதி’ போன்ற  ஆட்சேபகரமான விஷயங்களை நீங்கள் ஏன் வைத்திருந்தீர்கள்?  என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “இதுபோன்ற புத்தகங்கள்” மற்றும் சி.டி.க்கள்  ஆகியவை அரசுக்கு எதிரான சில விஷயங்களைக் கொண்டிருப்பதாகவும்,  கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது,  கோன்சால்வ்ஸின் வழக்கறிஞர் மிஹிர் தேசாய், காவல்துறையினர்,  சில நபர்களின் கணினிகளிலிருந்து மீட்கப்பட்ட சில மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்களின் அடிப்படையில் அடிப்படையில் குற்றச்சாட்டு கூறி உள்ளனர் என்றும்,  “இந்த கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்கள் எதுவும் கோன்சால்வ்ஸால் எழுதப்படவில்லை, அல்லது அவருக்கு உரையாற்றப்படவில்லை. ஆகவே, அவருக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டுக் களும் இல்லாத நிலையில், கோன்சால்வ்ஸுக்கு ஜாமீன் மறுக்கப்படக்கூடாது” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புனே காவல்துறை வழக்கறிஞர் அருணா பை, கோன்சால்வ்ஸுக்கு எதிராக கணினியிலிருந்து எந்தவொரு மின்னணு ஆதாரத்தையும், போலீசார்  கண்டுபிடிக்கப்பட வில்லை என்றாலும், அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சிடி மற்றும் புத்தகங்கள் போன்றவை ஆட்சேபத்துக்குறியன என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு  தெரிவித்த மனுதாரர் வழக்கறிஞர்,   தேசாய், இத்தகைய புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளை “வெறுமனே வைத்திருப்பது” “கோன்சால்வ்ஸை ஒரு பயங்கரவாதியாகவோ அல்லது தடைசெய்யப்பட்ட எந்த மாவோயிஸ்ட் குழுவின் உறுப்பினராகவோ செய்யவில்லை” என்று மறுத்தார்.

இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, ,இதுபோன்ற  பொருளை வைத்திருப்பது யாரையும் பயங்கரவாதியாக மாற்றாது என்று கூறியவர்,   கோன்சால்வ்ஸ் ஏன் தனது வீட்டில் அத்தகைய பொருட்களை வைத்திருந்தார் என்பதை விளக்க வேண்டும் என்றார்.

மேலும், “இதுவரை, சி.டி.க்களில் இருந்ததைப் பற்றிய விவரங்களை வழங்க காவல்துறையினர் தவறிவிட்டனர்  என்றும்,  அவர்களிடம் ஆட்சேபனைக்குரிய தலைப்புகள் இருப்பதாகக் கூறினால் மட்டும் போதாது. இந்த குறுந்தகடுகளை நீங்கள் சோதித்தீர்களா? அவை உள்ளே காலியாக இருக்கிறதா? ” என்று நீதிபதி கேட்டார்.

இவ்வாறு பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றன.

இந்த வழக்கின் ,நேற்றைய வாதத்தில், நீதிபதியின் மாவீரன் நெப்போலியன் போர்களின் போது ரஷ்யாவைப் பற்றிய லியோ டால்ஸ்டாயின் “போர் மற்றும் அமைதி” என்ற புத்தகம் தொடர்பான கருத்து தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

பலர் பிரதமர் மோடி, இதே நாவலை படித்தாரே, அவரும் பிரிவினைவாதியா? மாவீரன் நெப்போலியனின் வரலாறை குறிக்கும் நாவலை படிப்பதும், அதை வைத்திருப்பதும் குற்றமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில்  டிரெண்டிடாகி வருகிறது.