சுற்றுச் சூழலுக்குச் சைவ உணவு உகந்தது எனப் பரவலாக நம்பப் பட்டாலும், நம் நாட்டில் அசைவம் அதிகளவில் உட்கொள்ளப் படுவதில்லை. மேலும், நம் நாட்டில் பெரும்பான்மையான உழவர்கள் கால்நடை வளர்ப்பை நம்பியுள்ளனர்.

உலகவெப்பமயமாதலுக்கு காரணமான மாசு வாயுக்களை வெளியிடுவதில் விவசாயத்தின் பங்கு 15 சதவிகிதம் ஆகும். அதுவும் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பினால் வருவது தான்.
உலகின் 30% நிலப்பரப்பில், கால்நடைக்குத் தேவையான பயிர்களை வளர்க்கவே பயன்படுத்தப் படுகின்றது.

2014ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில், தினசரி 100கிராம் மாமிசம் சாப்பிடுபவர் தினமும் 7.2 கிலோ கார்பன்- டை- ஆக்சைட் (CO2) வெளியிடுவதாகவும். சைவ உணவு உண்பவர்கள் தினமும் 2.9 கிலோ கார்பன்- டை- ஆக்சைட் (CO2) வெளியிடுவதாகவும் முடிவு வெளியிட்டுள்ளது. ஆகவே, ஒருவரால், எந்த உணவு இயற்கைக்கு நல்லது என அளிதில் கூறிவிட முடியும்.

ஆனால், ஒரு இந்திய சமூகவியலாளராக, நான் ஏன் சைவ உணவை ஆதரிக்கவில்லை என்றால், நான் விவசாயிகளின் வாழ்வியலை அறிந்தவள்.
உலகில் தயாரிக்கப்படும் மாமிசத்தில் 95% அமெரிக்கா, ஐரோப்பா, ஆகிய நாடுகளிலிருந்து தான் வருகின்றது. அதுவும் அங்கே அதிகபட்ச சுகாதாரத்துடன் கால்நடை வளர்க்கப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில், பெரும்பாலும் கால்நடை, புல் மற்றும் பயிர் செடி தழைகளையே உணவிற்கு நம்பி உள்ளது.

நம் நாட்டு விவசாயிகள் பின்பற்றுவது அக்ரோ-சில்வோ-பேஸ்டோரலிசம் (agro-silvo-pastoralism), அதாவது விவசாயிகள், அவர்களது நிலங்களைப் பயிரிடுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், அதில், கால்நடைகளுக்குத் தேவையான செடி, தழைகளையும் வளர்க்கவும் பயன்படுத்துகின்றனர். அவர்களது நிலம் தான், அவர்களுக்கு உண்மையான காப்பீட்டு நண்பன். வங்கியோ, வேறு யாரோ கிடையாது.

கால்நடை முதலில் பால் தரும். அதன் சாணம் மண்ணுரமாகப் பயன்படும். பின்னர் அவை இறந்தபின், மாமிசம் மற்றும் தோலாகப் பயன்படும். ஆகவே, விவசாயிகளிடமிருந்து கால்நடையைப் பிரித்துவிட்டால் , நாட்டில், முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பறிப்பதற்கு சமம். அது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும்.

கடந்த காலங்களில், கால்நடை வறட்சிகால நிவாரணமாகப் பாவிக்கப்பட்டது. மழையின்றி விவசாயம் பாதிக்கப்படும் காலங்களில், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை விற்றும், அடகு வைத்தும் விவசாயிகள் தினசரி வாழ்க்கையை விவசாயிகள் கடத்தி வந்தனர்.

ஆனால், 2000 ஆண்டிற்குப் பிறகு, இந்தப் போக்கு மாறியது. கால்நடை பால் தருவதற்காகவே வளர்க்கப்பட்டது. அதனால், கால்நடை எண்ணிக்கையில், ஆண் மாடுகள் எண்ணிக்கை வெறும் 28 சதவிகிதமாகக் குறைந்து காணப்படுகின்றது. காளை மாடுகள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுகின்றது (ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகளுக்குக் கிராக்கி அதிகம்))
ஆனால், 15-20 ஆண்டுகள் உயிர்வாழும் பசுவும் எருமை மாடுகளும் 7-8 ஆண்டுகள் பால் சுறக்கும். பசுக் கன்று போடும் காலங்களில், விவசாயிகள் பால் விற்று வருமானம் ஈட்டுவர்.

கால்நடை வளர்ப்பு எளிதான காரியமல்ல. தோராயமாக, ஒரு மாட்டைப் பராமரித்து வளர்க்க ஆண்டிற்கு 70,000 ரூபாய் வரைச் செலவாகும். அதனால் தான் பால் தராத கால்நடைகளை விவசாயிகள் கறிகடைகளுக்கு (அடிமாட்டு விலைக்கு) விற்றுவிடுகின்றனர். அல்லது அதனைத் தெருவில் அலைய விட்டுப் பிளாஸ்டிக் , போஸ்டர் தின்று சாகவிடுகின்றனர்.

எனவே தான் நான் தோல் விற்பனை அல்லது மாமிசம் விற்பனைக்கு விதிக்கப்படும் தடையை ஆதரிக்கவில்லை. நாம் ஒரு பொருள் வைத்திருந்து அதனைக் கடைசியில் காயலான் கடையில் போட்டுக் கிடைக்கும் சொற்ப பணம் போன்றது தான், அடிமாடாக விற்கும்போது கால்நடை உரிமையாளரான விவசாயிக்குக் கிடைக்கும் தொகை.

மாமிசத் தடை விதிப்பது கொடூரமான மதிப்பிழக்க நடவடிக்கை.
மாட்டைக் கொல்லக் கூடாது எனும் மத நம்பிக்கையையும் நான் மதிக்கின்றேன். அரசே,மாடுகளைப் பராமரிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடமிருந்து அவற்றைப் பெற்று, ஒரு பசு பாதுகாப்பகம் நடத்தலாம்.

நான் சொல்ல வருவது, அதிகாரத்தில் மூலம் மக்களைச் சைவப் பிரியர்களாக ஆக்க முடியாது.
அதே போன்று மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஸ்திராவில் நடைபெற்று வருவது போல் வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி மூலம் மக்களைச் சைவ உணவுப் பிரியர்களாக மாற்ற முடியாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

– சுனிதா நரேன்.

டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மைய இயக்குனர்