அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டன குரல் கொடுத்தனர்.

இந்திய பிரதமர் மோடியும், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதே ஜனநாயகத்தை காப்பவர்களின் கடமை என்று கூறினார்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகையின் போது திரண்டிருந்த லட்சகணக்கான கூட்டத்தின் இடையில் இந்திய தேசிய கொடியை பிடித்துக் கொண்டு சிலர் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொடி பிடித்து சென்றவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்களா ? அல்லது அங்கு தற்காலிகமாக தங்கியிருக்கும் இந்தியர்களா ? என்று இந்திய தூதரகம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

மேலும், இந்திய அமெரிக்க நல்லுறவை சீர்குலைக்க விஷமிகள் செய்த சதியா ? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்காவின் உள்விவகாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட இந்தியர்கள் யார் என்று இந்திய உளவு துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.