வெளிநாடுகளுக்கு பாதி விலையில் ஏற்றுமதியாகும் பெட்ரோல் – காரணங்கள் இதோ ?

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒருபுறம் லாரி உரிமையாளர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தாலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. பெட்ரோல் விலை இந்த அளவிற்கு உயர்வதற்கான காரணம் என்ன என்று பலரும் கேள்விகளை எழுப்ப தொடங்கி உள்ளனர். மறுப்புறம் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

petrol

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் செலுத்தும் தொகையில் பாதி விலைக்கு வெளிநாடுகளுக்கு இந்தியா பெட்ரோலை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு சில பொருளாதார வல்லுநர்கள் பதிலளித்துள்ளனர். அதில் இந்தியா கிட்டத்தட்ட 15 நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை ஒரு லிட்டர் ரூ.34 க்கும், ஒரு லிட்டர் டீசலை ரூ.37க்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் உற்பத்திக்கான உயர்வரிகளை அரசாங்கம் உள்நாட்டு நுகவோர் விலைக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறது. இந்த ஆண்டும் தொடக்கத்தில் இருந்து ஜூன் மாதம் வரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ஹாங்காங், மலேசியா, மொரீசியஸ், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

petrol-price-breakup

ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலின் விலை 32 – 34 ரூபாயாகவும், டீசல் 34 – 36 ரூபாயாகவும் உள்ளது. அதே நமக்கு என்று விற்கப்படும் போது ஒரு லிட்டர் பெட்ரோல் 69.97 – 75.55 ரூபாயாகவும், டீசல் 59.70 67.38 ஆகவும் உள்ளது. இந்நிலையில் இந்த விலை வித்யாசத்திற்கான ஒரு சில காரணங்கள் இந்திய மக்களுக்கு தேவைப்படும் பெட்ரோல் மற்றும் வல்லுநர்களின் கூற்றுப்படி கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகின்றன.

1. கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. மத்திய கிழக்கு நாடுகளின் வாடிக்கையாளர்கள் கச்சா எண்ணையை பிறநாடுகளை காட்டிலும் இந்தியாவில் இருந்து பெறும் இடத்தை தக்க வைத்து கொள்ளவும், அதற்கான சுத்திகரிப்பு நிலையங்களின் செலவினை சமாளிக்கவும் ஆசியாவின் மிகப்பெரிய பெட்ரோல் ஏற்றிமதி நாடாக இந்தியா திகழ்கிறது.

2. உலக அளவில் அதிகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது. இது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும், பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளாக ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஏற்றுமதி செய்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 24.1 பில்லியன் டாலர் மதிப்புடைய பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது சர்வதேச சந்தையில் 3.9% வளர்ச்சியாகும்

petrol-tax-breakup

3. உள்நாட்டு நுகர்வை பொருத்த வரை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை அதிகரிக்கவோ, குறையவோ செய்கிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளு ஏர்றுமதி செய்யப்படும் எண்ணெய் அவர்கள் அளிக்கும் தொகையை காட்டிலும் தரமானதாகவே உள்ளது

4. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி விலை உலகளாவிய வழங்கல் கோரிக்கையை தீர்மானிக்கிறது. இதன் காரணாம எண்ணெய் விலையை உயர்த்தி ஏற்றுமதி செய்ய முடியாது.

5. உள்நாட்டில் விற்பனையாகும் எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலையை காட்டிலும் அதிகமே. இது மத்திய மற்றும் மாநில அரசுகளில் 100% வரியை திணிப்பதாகும்.

6. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூற்றுப்படி தற்போது கச்சா கலந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ, 35.90 ஆகவும், டீசல் 38.25 ஆகவும் உள்ளது.

7. இதே சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலை ரூ, 37.93 ஆகவும், டீசல் 41.04 ஆகவும் உள்ளது.

8. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிக்கப்படாததால் அவை குறைந்த விலை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

9. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.49 ஆக உள்ளது. இதில் காப்பீடுக்கு 19.48 பைசாவும், டீலர் கமிஷனுக்கு ரூ.3.61 பைசாவும், வாட் வரி லிட்டருக்கு ரூ.16.47 ஆகவும் உள்ளது

10. இதேப்போல் டீசல் ரூ.69.04 காசுக்கு விற்கப்படுகிறது. காப்பீட்டிற்கு ரூ.15.33 பைசாவும், டீலர் கமிஷனாக ரூ.2.51 பைசாகவும், வாட் வரி ரூ.10.16 பைசாகவும் உள்ளது.