ம.பி. அரசியல்: பசியுடன் திரியும் கழுகுகள்! பாஜகவை விளாசிய கஸ்தூரி…

சென்னை:

த்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் பாரதியஜனதா கட்சியின் தலைமையை, நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், ஜோதிர்ஆதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு பின்புலமாக இருந்து பாஜக காய் நகர்த்தி வருகிறது…

இந்த நிலையில்,  பதவிக்காக வாயை பிளக்கும் பசியும் திரியும் கழுகு போன்று பாஜக செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக கஸ்தூரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஏன் எப்போது பார்த்தாலும் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்ற பார்க்கிறது? இப்படி பதவிக்காக வாய் பிளந்து நிற்கும் பருந்தாக இருக்காமல் சற்று பொறுமையாக இருந்து, காங்கிரஸ் தானாகவே வெடித்து சிதற விட வேண்டியதுதானே?

ஏன் அப்படி செய்யாமல் பதவிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது பா.ஜனதா என்று புரியவில்லை. காங்கிரசால் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதையும் தனது செயலின் மூலம் காட்ட பாஜக முயற்சிக்கலாமே?  காங்கிரசை அப்படியே செயல்படவிட்டால் பா.ஜனதாவுக்கு அது நீண்ட கால பலனையே தரும். மக்கள் மத்தியிலும் நல்ல கருத்து உருவாகும்.

மகாராஷ்டிராவில் கற்றுக்கொண்ட பாடத்தை பா.ஜனதா நினைவு கூற வேண்டும். இதுபோல பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்றுவதை நிறுத்த வேண்டும். உங்களது உள்ளூர் தலைவர்கள் எப்படியாவது தலையை தேன் கூட்டுக்குள் விட்டு தேனை எடுக்க வாய்ப்பு தேடுகிறார்கள் பாருங்கள். ரொம்ப மோசம்’ என்று கடுமையாக சாடியுள்ளார்…