தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படும்போது, அரசு எதிர்ப்பது ஏன்? மதுரை ஐகோர்ட்டு

மதுரை,

மிழகம் முழுவதும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்  கொண்டுவர வேண்டும் என குமரி மகா சபா அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டு வரும்போது, அரசு எதிர்ப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியாக செயல்பட்டால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளியை நாடுகிறார்கள் என்று  உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படும் போது, அரசு மட்டும் எதிர்ப்பது ஏன்? என்று அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இருந்தபோது, 1995ம் ஆண்டு  நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின்போது, இந்தப் பள்ளிகள்  ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால், தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, நவோதயா பள்ளிகள்மூலம் இந்தி திணிக்கப்படும் எனக் கூறி, இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் காரணமாக தமிழகத்தில்  நவோதயா பள்ளிகள் திறக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது.

தற்போது, பாரதியஜனதா அரசு பதவியேற்ற பிறகு, தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்க முயற்சி செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணையில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிபதி செல்வம் மற்றும் ஆதிநாதன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், தமிழக கல்வித்துறை முதன்மைச் செயலர் அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Why is the government opposed to Hindi? teaching in private schools? Madurai HC Questioned, அரசு எதிர்ப்பது ஏன்? மதுரை ஐகோர்ட்டு, தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படும்போது
-=-