பணமதிப்பிழப்பு போல் ராமர் கோவில் கட்ட ஏன் உடனடி நடவடிக்கை இல்லை?….சிவசேனா

மும்பை:

பணமதிப்பிழப்பு போல் ராமர் கோவிலை கட்ட ஏன் திடீர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜகவுக்கு உத்தவ் தாக்ரே கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ராமர் கோவில் கட்டுதல், பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது ஆகியவை குறித்த தேர்லுக்கு முன்பு பாஜக பேசுகிறது. ஆனால் அது என் தேர்தல் என்பது தெரியவில்லை. 2019 தேர்தலா அல்லது 2050ம் ஆண்டு தேர்தலா என்பது பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை.

பணமதிப்பிழப்பு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் ராமர் கோவில் கட்டவும் அதேபோல் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. இதுவரை, வளர்ச்சிதான் எங்கள் கொள்கை என்று முழங்கிய பாஜக, ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது’’ என்றார்.