சசிகலா உறவினர் ராவணன் வீட்டில் ரெய்டு இல்லை ஏன்?

சென்னை,

மிழகத்தையே உலுக்கி உள்ள சசிகலா குடும்பத்தினர் ரெய்டுகள் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், சசிகலா உறவினரான ராணுவணன் வீட்டில் எந்தவித ரெய்டும் நடைபெறவில்லை. இது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 9ந்தேதி முதல், ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுக்கு நெருக்க மானவர்களில் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. இன்று 5வது நாளாகவும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சசிகலா குடும்ப உறுப்பினராக ராவணன் என்பவர் வீடு உள்பட ஒருசில இடங்களில் எந்தவித ரெய்டும் நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மக்களிடேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுக கட்சியினரேயும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது, ராவணனுக்கு சொந்தமான இடம் ஒன்று  கோவை, திருச்சி சாலையில்  இருப்பதாகவும், இங்குள்ள பங்களாவில்தான், ஏற்கனவே  கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என ஒட்டுமொத்த கொங்கு மண்டல அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் என்றும்,  பல ரகசிய ஆலோசனைகள் இங்கு நடைபெற்றுள்ளது என்றும்,  கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சுவடு தெரியாமல் வந்து போவதும் உண்டு என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே,  2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியை இழந்த பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது,   கொங்கு மண்டலத்தில் இருந்து போட்டியிட்டவர்கள் அனைவரும் ராவணனால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில், ஜெ.வின் ஜோதிடர் ஒருவரை கடத்தியதாக வந்த புகாரையடுத்து, ராவணன் தலைமறைவானதும் அனைவரும் அறிந்ததே. அதைத்தொடர்ந்து, சிறிது காலம் அமைதியாக இருந்த அவர்  2011 சட்டப்பேரவை தேர்தலின்போது மீண்டும் வெளியே வந்தார்.

சசிகலா மீது ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கையின்போது, இவர்மீதும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அதையடுத்து, அவரை கார்டன் பக்கம் வரக்கூடாது என்று ஜெயலலிதா எச்சரித்தார். பின்னர் சசிகலாவின் சிபாரிசின் பேரில் அவர்மீதான நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன.

ஆனால், தற்போது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், இவர் மட்டும் எப்படி தப்பித்தார் என பலவாறான யூகங்கள் வெளியாகி உள்ளது. இதற்கு காரணமாக, அவருக்கும் எடப்பாடிக்கும் இடையே உள்ள நெருக்கம்தான் காரணம் என கூறப்படுகிறது.

இபிஎஸ் சிபாரிசின் பேரில்தான் அவர்மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் எந்தவித ரெய்டும் நடத்தப்படவில்லை என்ற செய்தி கசிந்துள்ளது.

ஏற்கனவே, பெங்களூரில் முதலில் நடைபெற்ற  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.க்கு சிறை தண்டனை கிடைத்தால், மீண்டும் ஓபிஎஸ்-ஐ முதல்வராக நியமிக்கக்கூடாது என கருதி, சசிகலா கருதுவதாக, சசிக்கு எதிராக  அப்போதைய உளவுத்துறை உயர் அதிகாரி மூலம்,  ஆதாரத்துடன் ஜெயலலிதாவிடம் காட்டி, ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

அதையடுத்து சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார் என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து சசிகலா குடும்பத்தினருக்கும் ராவணனும் இடையே நட்பு விரிசலானது.

அதன் காரணமாகவே ஜெயலலிதா மரணத்தின்போது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தவரை அருகிலேயே விடாமல் ஓரங்கட்டினர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு,  கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரை ராவணன்  சந்தித்ததாகவும், அவர்மூலம் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனையை தொடர்ந்தே அவரது இருப்பிடம் ரெய்டில் இருந்து தப்பியது என கூறப்படுகிறது.

எல்லாம் அந்த மோடிக்கே வெளிச்சம்.