டெல்லி: அரசு பிரதிநிதிகள் ஏன் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வில்லை என்று காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர கால ஒப்புதல் தந்தது. அதே நேரம், இந்த தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என்றும் அவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. மற்ற நாடுகளை போல, முதல் தடுப்பூசியை நாட்டு தலைவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். முதல்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறி இருப்பதாவது: அரசு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசியை ஏன் செலுத்திக் கொள்ளவில்லை? பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும் தடுப்பூசி போட்டு கொள்ளாமல் தவிர்க்கின்றனர் என்று கூறினார்.