ஏன் வேண்டும் ஜல்லிக்கட்டு?

போஸ் இன்டிகஸ் ( Bos indicus) எனப்படும் நமது மாடுகள் பற்றி அனைவரும் தெரிய வேண்டியது அவசியம்

சென்னை,

ற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக இளைஞர்களின் எழுச்சி கண்டு உலகமே வியந்து வருகிறது.

அறிவியல் பூர்வமாக அவர்கள் பேசும் கருத்துக்கள் அனைவரையும் யோசிக்க வைக்கிறது.

அன்று முதல் இன்றுவரை இந்தியர்களின் வாழ்வில் ஆடு மாடுகள் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே.

அதிலும் தமிழகத்தில் மாடுகளை தங்கள் குடும்ப உறுப்பினராக பாவித்து, அதற்காகவே மாட்டுப்பொங்கல் என்று ஒரு திருநாளை ஏற்படுத்தி விழா நடத்தி, நமது விவசாயத்துக்கு உதவிடும் மாடுகளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நம் வாழ்வில் இன்றியமையாத நம் நாட்டு மாடுகளை ஒழிக்க அந்நிய சக்திகளின் ஆதரவோடு உருவான பீட்டா அமைப்பின் துணையோடு ஒருசில அரசியல்வாதிகளின் அதிகார மமதையாலும், பேரசையாலும்  இன்று நாட்டு மாடு இனமே அழிந்து வருகிறது.

பாரம்பரியமிக்க,  இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரம்மன் வகை எனப்படும் Bos indicus வகை மாடுகள், காளைகள் தென் ஆசிய பகுதிகளில் மட்டுமே இன்றைய உலகில் வாழ்ந்து வருகிறது.  

தற்போது தமிழகம் மட்டுமல்லாது உலக தமிழர்கள் போராடி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன்… ? தமிழக இளைஞர்கள் கையில் எடுத்துள்ள அமைதியான போராட்ட முறை இந்தியாவை மட்டும் இல்லாமல் உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான அடிப்படை காரணமாக இருப்பது சத்தான பால், தமிழ் மக்களின் ஆரோக்கியம், மாடு வளர்ப்பு, பால் வர்த்தகத்தைச் சார்ந்து இருக்கும் தமிழ் மக்களின் வாழ்வாவாதரத்தை காக்கும் முயற்சி எனப் பல காரணங்கள் இருந்தாலும் அனைத்திற்கும் மேலாக நம்முடை பாரம்பரியத்தைக் காப்பது தமிழராகிய நமக்கு முக்கியக் கடமை.

நமது நாட்டு மாடு     –    வெளிநாட்டு மாடு (பார்த்தாலே தெரியும்)

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் துவங்கிய முதல் நாம் A1 பால் A2 பால் என்னும் வார்த்தை நாம் காதுகளில் கேட்டுக்கொண்ட இருக்கிறது.

A1 பால் என்றால் என்ன?

 A1 பால் ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மாடுகள் குளிர் நிறைந்த இடத்தில் உள்ளதால் இதன் பாரம்பரியமான (போஸ் இண்டிகஸ்) மரபணுவிலேயே மாற்றம் ஏற்பட்டு இவை உற்பத்தி செய்யப்படும் பாலில் இயல்பாக இருக்கும் போலைன் என்னும் ஆமினோ அமிலம் Histidine ஆக மாறியுள்ளது.

இவை மனிதனின் உடலில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தி அமினோ அமிலத்தின் அளவு அதிகரித்துவிடும்.  இவை உடலில் BCM7 என்ற பெப்டைட்-ஐ உற்பத்தி செய்யும் .

சுருச்சி கண்சல்டன்ஸ் என்ற ஆய்வு நிறுவனம், செய்த ஆய்வின் படி  1 லிட்டர் A1 பாலில் 34-32 கிராம் கேசின் உள்ளது இதில் 9-12 கிராம் BCM7 உள்ளது.

இதன் காரணமாக உருவாகும் பாதிப்புகள்:  

குழந்தைகளுக்கு ஆட்டிசம் (Autism), டைப் 1 நீரிழிவு மற்றும் திடீர் மரணத்தையும் ஏற்படுத்தும். பெரியவர்களுக்கு: CAD, இதயக் கோளாறு, நீரிழிவு, Ulcerative colitis, Multiple sclerosis, மனநோய், Parkinson மற்றும் Schizophrenia போன்ற கொடிய நோய்களையும் ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.  

A2 பால் என்றால் என்ன?

 A2 பால் இந்தியாவில் இருக்கும் பாரம்பரியமான மாடுகள் அனைத்தும் (செயற்கை கருவூட்டல் செய்யப்படாத மாடுகள்) தற்போதைய நிலை வரை பாதுகாப்பான A2 பால் சுரக்கிறது என்று மத்திய அரசும் உறுதி செய்துள்ளது.

A1 பாலில் இருக்கும் அடிப்படியான பிரச்சனை செரிமானம்.

A2 பால் மனித உடலில் எளிதாகச் செரிமானம் ஆகக் கூடியவை என்பதால் மனிதனுக்குப் பாலின் முழுமையாகச் சேர்கிறது.

இது இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். இதனை நாம் பாதுகாக்க வேண்டும்.  

வரத்தக நோக்கமே….

தற்போதைய நிலையில் நியூசிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆமெரிக்கா போன்ற பெரு நகரங்கள் A2 பால் வகையை நோக்கிச் செல்ல துவங்கியுள்ளது. இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள A2 பால் தட்டுப்பாட்டின் வாயிலாகவே இந்தியாவில் தற்போது பிரச்சனை வெடித்துள்ளது.

குறிப்பாகப் பிற மாநிலங்கள் இதை உணராத நிலையில் தமிழ் மக்கள் இதனை உணர்ந்தே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நமது பாரம்பரியத்தையும், வருங்காலம் நோய்நொடி இல்லாத சுகாதாரமான நாடாக மாறவும்  இந்த போராட்டம் அவசியமாகிறது.

விலை வித்தியாசம்

ஆஸ்திரேலியாவில் BCM7 இல்லாத A2 பாலின் விலை ஒரு லிட்டர் 28 ரூபாய், சாதாரண A1 பாலின் விலை வெறும் 11 ரூபாய்.  இதுவே பல கார்பரேட் பால் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கிறது.

இதனாலே இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய மாடுகள் வெளிநாடுகளுக்கக் கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  

ஏன் வேண்டும் ஜல்லிக்கட்டு?  

இந்தியாவின் பாரம்பரிய மாடுகள் மற்றும் காளைகளின், வீரியம், தன்மையைப் பாதுகாக்கும் ஒரு விளையாட்டு தான் இந்த ஜல்லிக்கட்டு.

அதனைத் தமிழனின் பாரம்பரியமாக இருப்பது நம்முடைய சிறப்பு .அதனைத் தமிழராகிய நாம் காப்பாற்றாமல் வேறுயார் காப்பார்கள்.

ஒவ்வொரு தமிழன் மட்டுமல்லாது இந்தியனும் அந்த அரிய போராட்டத்தி கலந்துகொள்ள வேண்டும் என்பதே நமது அவா…

இந்தியாவில் மாடு மற்றும் பால் ஏற்றுமதிக்கு மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும்.

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்