Random image

ராணுவ துப்பாக்கி கொள்முதல் நடைமுறை ரபேல் விமானத்துக்கு பின்பற்றவில்லை…..காங்கிரஸ்

டில்லி:
ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதலில் மத்திய பாஜக அரசு இரண்டு நிலைப்பாடுகளை கையாளுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்திய விமானப் படைக்கு ரபேல் ரக விமானங்களை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘மத்திய பாஜக அரசு ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதலில் 2 நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. ரபேல் விமான கொள்முதலுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்யப்பமம் ஏகே 103 ரக துப்பாக்கிகளுக்கு பின்பற்றப்படவில்லை.

ரபேல் ஒப்பந்தம் என்பது இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஏற்பபட்டதாகும். ஆனால், ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்ததில் மோடி பங்கு எதுவும் இல்லை. அதானி குழுமத்துடன் இணைந்து இந்திய ராணுவத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கிகள் தயாரிக்கும் பணிக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அனுமதி வழங்கவில்லை.

மாறாக இந்திய அரசின் ராணுவ தொழிற்சாலை வாரியத்துடன் இணைந்த கலாஸ்னிகோவ் நிறுவனத்துடன் இணைந்து ஏகே 103 ரக துப்பாக்கிளை தயாரிக்க ரஷ்யாவுக் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடைமுறை ஏன் ரபேல் ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்படவில்லை. இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்துடன் இணைந்து ரபேல் விமானங்களை தயாரிக்க ஏன் தஸ்ஸாட் விமான நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கவில்லை’’என்றார்.

இதற்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதில் கூறுகையில்,‘‘ரபேல் விவகாரத்தில் 36 விமானங்கள் இந்தியாவுக்குள் வருகிறது. இதில் இந்தியாவில் எதுவுமே செய்வதில்லை. ரஷ்ய துப்பாக்கி விவகாரத்தில் அது இங்கேயே தயாரிக்கப்படுககிறது. அதனால் இந்த இரண்டுமே முற்றிலுமே வேறுபாடு கொண்டதாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.