கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை:

லப்பட பால் விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

பால் கெட்டுப்போகாமல் இருக்க தனியார் பால் நிறுவனத்தினர், அதில் ரசாயணம் கலப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த ஆண்டு  கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமைச்சரின் கருத்துக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதுகுறித்த விசாரணையில், சில தனியர் நிறுவனங்கள் பாலில் ரசாயணம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஆனால்,அவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, வழக்கறிஞர் சூரிய பிரகாசம்  உயர்நீதிமன்றத்தில், பால் கலப்படம் தொடர்பான புகார் குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின விசாரணையின்போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் பாலில் கலப்படம் நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம், இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன என்பது பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?  கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

மேலும்,  கலப்பட பால் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசின் அறிக்கை தெளிவாக இல்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.