சென்னை:

ன்று அதிகாலை முதல் சசிகலா குடும்ப உறவினர்கள், ஜெயா டிவி அலுவலகம் மற்றும் சசிகலாக்கு நெருக்கமானவர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சோதனை குறித்து பலவாறாக கருத்துக்கள் பரிமாறப்பட்டு வரும் வேளையில், சோதனை ஏன் நடைபெறுகிறது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது,

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் இருந்தது அம்பலமானது.

பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்,

ரெயின்போ ஏர் பிரைவேட்

லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட்,

இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அரண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்

ஆகியவை சசிகலா நடத்தி வந்த போலி நிறுவனங்கள்.

இந்த போலி நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா டிவிக்கு தொடர்புடையதா என்பது குறித்தும், மேலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவே அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.