மழை…  ராத்திரி ரணகளம் ஏன்?:   ரமணன் விளக்கம்

சென்னை:

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இரவு நேரத்தில் கன மழை பெய்வதற்கான காரணத்தை   சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் விளக்கியுள்ளார்.

“காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பதற்கும் புயல் என்பதற்கும் முக்கிய வேறுபாடு உண்டு” என்ற ரணமன் மேலும் தெரிவித்த்தாவது:

“புயல் உருவானால் அது கரையை கடக்கும் வரை மழை பெய்யும். . ஒன்றரை நாளில் புயல் கரையை கடந்துவிடும். அதன்பிறகு புயல் கரையை கடந்த இடத்தில் வானம் தெளிவாக ஆகிவிடும். . இயல்பு நிலை உடனே திரும்பிவிடும்.
ஆனால், காற்றழுத்த்தாழ்வு மண்டலங்கள் என்பது வேறு. வட கிழக்கு பருவமழை காலங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்கக்கடலில் உருவாகுவது வழக்கம். அவை அப்படியே மையம் கொண்டிருக்கும். புயல் போல குறிப்பிட்ட நேரத்தில் கடந்துவிடாது.

அவற்றின் இயல்பே இரவில் மழை பொழிவை தருவதுதான். மக்கள் அச்சப்பட தேவையில்லை. எவ்வளவு அதிகம் தாழ்வு மண்டலங்கள் உருவாகுகின்றனவோ  அவ்வளவு அதிகமாக மழை பெய்யும்.

மேலும், இப்போது கடலோர மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்கிறது. சென்னைக்கு 100 கி.மீ உள்ளேயுள்ள தமிழக பகுதிகளில் மழையில்லை. வாலாஜா பகுதியில் கூட வெறிச்சோடி கிடக்கிறது.

ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. இந்த மழை உள் மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று ரமணன் தெரிவித்தார்.