அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது ஏன்?….மதுசூதனன் விளக்கம்

சென்னை:

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்ப்டடார். அப்போது நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பொதுச் செயலாளர் பதவியை தொடர்ந்து சசிகலா முதல்வர் பதவியையும் ஏற்க முயற்சி மேற்கொண்டார். இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து தர்ம யுத்தம் தொடங்குவதாக அறிவித்தார். இவருக்கு மதுசூதனனும் ஆதரவு அளித்தார். இதன் பின்னர் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று இந்த இருவரும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது ஏன்? என்று மதுசூதனன் விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணம் சசிகலாவிடம் இருந்தது. அதனால் தான் அவரை பொதுசெயலாளராக தேர்ந்தெடுத்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.