பயிரிடும் விவசாய நிலங்களை ஏன் புல்லட் ரயில் திட்டத்திற்கு அளிக்க வேண்டும் ?

பயிரிடும் விவசாய நிலங்களை நாங்கள் ஏன் புல்லட் ரயில் திட்டத்திற்கு அளிக்க வேண்டுமென குஜராத்தை சேர்ந்த விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வால்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை சட்டவிரோதமாகவும், மாற்றுஇடம் வழங்காமலும் அதிகாரிகள் கைப்பற்றுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
bullet
மே மாதம் 30ம் தேதி ரதிலால் படேல் தெற்கு குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் புல்லட் ரயில் திட்டம் குறித்து திரையிட்டு காட்டி விளக்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மும்பை முதல் அகமதாபாத் வரை புல்லட் ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் முப்பையில் இருந்து அகமதாபாத் செல்வதற்கு தேவைப்படும் 5 மணி நேரம் குறைக்கப்படுகிறது. 20 நிமிடங்களுக்கு ஒரு புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், இதில் ஜவுளித்துறை வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் பயணிக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக 1.1லட்சம் கோடி முதலீடாக அளிக்கப்பட்டுள்ளது. 866ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தி 508கி.மீ. தூரத்திற்கு புல்லர் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதனால் 6ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 1695 வீடுகள் கையகப்படுத்தப்படும் என்றும், 80400 மரங்கள் அழிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குஜராத்தில் உள்ள வால்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு மறுப்பு தெரிவிக்க ஜூன் 9ம் தேதி கடை நாள் என்றும், வேண்டுமானால் 60 நாட்கள் கூடுதலாக அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
bullet-train-project-1-e
இது குறித்து வல்சாரி மாவத்தின் அதிகாரிகள் கூறுகையில் நிலம் கையகப்படுத்துவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும், மரங்கள் அழிக்கப்பட்டால் தங்களுக்கு கிடைக்கும் நிலத்தில் மரத்தை வளர்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப்படும் பஞ்சாயத்துகளில் பொதுமக்களுடம் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மே மாதம் 30ம் தேதி வல்சாத் பஞ்சாயத்தில் நடைபெற்ற விவசாயிகளுடனான கூட்டத்தில் புல்லட் ரயிலின் மாதிரியையும், அதன் பயன்களும் விளக்கப்பட்டன. மரங்கள் அழிக்கப்படுவது குறித்து விவசாயிகள் எழுப்பிய கேள்விக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் மாம்பழம் மற்றும் சப்போட்டா மரங்கள் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த திட்டத்தை எதிர்த்து ஜூன் 15ம் தேதி விவசாயிகள் இரண்டு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். உலக நாடுகளுக்கு நாங்களும் புல்லட் ரயில் சேவையை வைத்துள்ளோம் என்று காட்டிக்கொள்ளவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் விவசாய நிலங்களை அழித்து வரும் இந்த திட்டம் தங்களுக்கு தேவையில்லை என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.