சிறை தண்டனைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? முன்னாள் அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை:

குற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருண்ணரெட்டிக்கு  3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுமீதானவிசாரணையின்போது, 3 ஆண்டு சிறை தண்டனைக்கு  ஏன் தடை விதிக்க வேண்டும்? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழக முன்னாள் அமைச்சரான பாலகிருஷ்ணரெட்டி, 1998ம் ஆண்டு கள்ளச் சாராயம் தொடர்பான விவகாரத்தில், அரசு  பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் சிறப்பு நீதி மன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சிறப்பு நீதி மன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவு சரியானது தான் என்றும், அதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என கேள்வி நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைச்சர் இருக்க வேண்டும் என நீதிபதி பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின்போது,  தீர்ப்பு வந்தவுடனேயே அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 3 years term for throwing stones, 3 ஆண்டுகள் சிறை, Balakirshna reddy resigned, chennai high court, chennai High Court Questioned, lose the post of minister, special court verdict, TN minister Balakrishna reddy, அமைச்சர்  பாலகிருஷ்ணா ரெட்டி, உயர்நீதி மன்றம் கேள்வி, ஏன் தடை, பஸ்கள் மீது கல்வீச்சு, பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினா, முதல்வருடன் ஆலோசனை, முதல்வருடன் பாலகிருஷ்ணா ரெட்டி
-=-