பிரதமர் நரேந்திர மோடி, தனது மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியை வேலையிலிருந்து நீக்க மாட்டார். ஆனால் இந்திய மக்கள் பா.ஜ.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் அடுத்த பொதுத் தேர்தலில் பொறுப்புகளிலிருந்து நீக்குவதற்கு ஸ்மிருதி ஒரு முக்கிய காரணமாக இருப்பார்.

இந்த தேசத்தை உருவாக்கும் பணியில் இதுவரை இருந்த அமைச்சர்களிலேயே இரானி தான் மிகக் குறைந்த தகுதியுடைய  அமைச்சர், இவருக்கு முன் இந்த பதவியில் அறிவுசார் பிரபலங்களான மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஹுமாயூன் கபீர், வி.கே.ஆர்.வி.ராவ், எம்சி சுக்லா மற்றும் எஸ் நுருல் ஹசன், மற்றும் அறிவார்ந்த அரசியல்வாதிகளான கரண் சிங், கே.சி.பன்ட், பி.வி.நரசிம்மரா மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பதவி வகித்தனர்.
HRD MINISTERS
சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டிற்கு கிடைத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களிலேயே இவர் தான் மிகக் குறைவாகச் செயல்படும் அமைச்சர்.  மேலும் அவர் இதுவரை சீர்குலைக்கும் சிந்தனையைக் காட்டியதும் மட்டுமல்லாமல் அழிவு அரசியலைத் தான் நடத்தி வருகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறுகள் எதுவாயினும், அது நாட்டின் கல்வி நிலையைப் பற்றி தேசிய அளவிலான மறு சிந்தனையைத் தூண்டியதில் கணிசமாகப் பங்களித்தது மறுக்கமுடியாத உண்மை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த அறிவுசார் ஆணையம், உயர் கல்வி நிலையைப் பற்றி  தீவிர சுயபரிசோதனைச் செய்து சில பரிந்துரைகளை வழங்கியது. அதனை செயல்படுத்த துவங்கி இருந்தாலே , இரானியை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு ஆக்கப்பூர்வமாக அப்பணி ஆக்கிரமித்திருக்கும்.
கபில் சிபல் மற்றும் எம்.எம் பல்லம் ராஜு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கீழ் இருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், நாட்டின் குழந்தைகளுக்கு சட்டபூர்வமாக உத்தரவாதமுள்ள உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி மற்றும் இன்னும் சிறப்புள்ள தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு ஆகியவற்றை அளித்து, பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், தொழில்நுட்ப கல்வியின் மோசமான நிலை மாநில போன்ற விஷயங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து,வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்க உரிமை அனுமதிக்க முயற்சித்தனர். பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆண்ட இந்தியாவில்  இந்த அமைச்சகத்தின் பல சாதகமான பங்களிப்புகளில் சில இவை.
கல்லூரி வளாகங்களில் ஏ.பி.வி.பி. இருக்க காரணங்களை புதிதாக உருவாக்கி, காவி நிற மாணவர் அமைப்பின் எதிரிகளை  மாவோயிஸ்டுகளாக சித்தரித்து, பல்கலைக்கழக விடுதிகளில் மாட்டிறைச்சியைத் தடை செய்தது, முக்கியமான கல்வி நிலைகளில் துணை நிலையான கல்வித் தகுதிகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ். செயலர்களை நிறுவியது போன்ற செயல்களைத் தவிர இரானி வேறென்ன செய்தார்? என விமர்சகர்கள் வினவுகின்றனர்.

 
யாக்கூப் மேமனின் தூக்கு தண்டனையை எதிர்த்து போராடிய ரோஹித் வெமுளாவை “தேசவிரோதி” என பெயரிட்டு, ரோஹித் வெமுளா இறப்பிற்கு காரணமாகி, ஐந்து நாள் அமைதிக்குப் பிறகு, ரோஹித் குடும்பத்தின் துக்கத்தில் பங்கேற்பது போல் நாடகமாடினார்.
 
இரானி பாஜகவிற்கு பாரமாகவும், அமைச்சகத்திற்கு சங்கடமாகவும் இருக்கிறார் என்பது பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு விரைவாக அவரது பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப் படுகிறாரோ அது இந்த நாட்டிற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

 
ஐ.ஐ.டி. கல்விக் கட்டணம் உயர்வு:ஸ்மிருதி இரானி முடிவு
என்.ஐ.டி. ஸ்ரீநகர் மாணவர் போராட்டம்: ஸ்மிருதி இரானி முடிவு
உ.பி. முதல்வர் வேட்பாளர் ஸ்மிருதி இரானி : பொய் சொன்னதற்கு பரிசு
நாடாளுமன்ற ஆவண முறையை பின்பற்றாத ஸ்மிருதி இரானி
பாராளுமன்றதில் புளுகிய ஸ்மிருதி இரானி
சிரியாவும் சமஸ்கிருதமும்