டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

லோக்சபாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து, ராஜ்யசபாவில் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சட்டத்திற்கு புறம்பானது. அது தெரிந்தும் நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல்.

மசோதா குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறப்படவில்லை. சட்ட அமைச்சர், தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டதா,  கிறிஸ்தவர்களை சேர்த்து இருக்கிறீர்கள்?

ஆனால், இஸ்லாமியர்களை விட்டிருக்கிறீர்கள், அது ஏன்? இலங்கை இந்துக்களை சேர்க்க வில்லை, ஆனால் பூட்டான் நாட்டு இந்துக்களை சேர்த்து உள்ளீர்கள்?

இதற்கு யார் பொறுப்பாக பதில் சொல்வது? இந்த மசோதா, அரசியலமைப்புக்கு எதிரான மசோதா என்று காட்டமாக கூறினார்.