ப்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரபர்பபாக விவாதிக்கப்படுவது, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருக்கும் போராட்டம் பற்றித்தான். வரும் ஆகஸ்ட் ஏழாம் தேதி, “பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்” ஒன்றை அறிவித்திருக்கிறது அக் கழகம்.

அக் கழகத்தின் தலைவர் கோவை.ராமகிருட்டிணனை தொடர்புகொண்டு பேசினோம்.

“பார்ப்பணர்கள், பூணூல் அணிந்துகொண்டு தங்களை உயர்வானவர்களாகவும், பிற சாதியினரை இழிவானவர்களகவும் கருதுகிறார்கள். பூணூல் என்பது தங்களை உயர் சாதியாக காட்டும் அடையாளமாக நினைக்கிறார்கள். இது தவறு என்பதை உணர்த்தவே பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

பன்றியை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் உண்டு.

பூணூல் அணிந்துகொண்டு, மற்றவர்களை இழிவானவர்களாக பார்ப்பர்கள் நினைக்கிறார்கள் அல்லவா…. அது போல விலங்குகளில் இழிவானதாக பன்றியை கருதும் வழக்கம் மக்களிடையே உள்ளது. ஆகவேதான் பன்றிக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் “சேரி பிஹோவியர்ட என்று ஒருவர் சொல்லப்போக.. சேரி மக்களை அவமதித்துவிட்டார் என்ற சர்ச்சை எழுந்தது. அது போல சில, சேரிப்பகுதிகளில்தான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே  தங்களது போராட்டம் சேரி மக்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.

இது  தவறான விமர்சனம். சேரி மக்கள்தான் பன்றிகளை வளர்க்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பலரும் வளர்க்கிறார்கள். பண்ணைகள் அமைத்தும் வளர்க்கிறார்கள்.

ஆகவே எங்களது போராட்டத்தை தவறாக யாரும் நினைக்க மாட்டார்கள். 

பசு குறித்தும், பசு இறைச்சி உண்ணக்கூடாது என்றும் சர்ச்சைகள் நிலவுகின்றன. நீங்கள் ஏன் பசுவை தேர்ந்தெடுக்கவில்லை  என்பதும் சிலரது கருத்தாக இருக்கிறது.

பசுவைத்தான் அவர்கள் ஏற்கெனவே புனிதம் என்கிறார்கள். ஆகவேதான் இழிவானதாக கருதப்படும் பன்றிக்கு பூணூல் அணிவித்து அவற்றை புனிதமாக்கி உயர்த்துகிறோம் (சிரிக்கிறார்.)

போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வாங்கிவிட்டீர்களா?

நிச்சயமாக அனுமதி கிடைக்காது. போராட்டம் நடத்தி கைதாக வேண்டியதுதான்” என்று சொல்லி முடித்தார் கோவை.ராமகிருட்டிணன்

(பேட்டி தொடரும்)