சென்னை :
லகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தங்கள் நாட்டு மக்களுக்கு தினம்தோறும் செய்தியாளர் சந்திப்பு மூலம் கொரோனா வைரஸ் குறித்தும் அதனால் ஏற்பட இருக்கும் பொருளாதார சிக்கலையும், அதனை சமாளிக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையளித்து வரும் வேலையில், இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கை நீட்டித்து உள்துறை அமைச்சகம் வாயிலாக அறிக்கை மட்டுமே வெளியிட்டிருக்கும் மத்திய அரசை ப. சிதம்பரம் வினவியிருக்கிறார்.

ரடங்கு 1.0 மற்றும் 2.0 பிறப்பிக்கப்பட்ட போது பிரதமர் மோடி அவர்களே தொலைக்காட்சி வாயிலாக அவற்றின் நோக்கங்களை மக்களுக்குச் சொன்னார்
இந்த முறை பிரதமர் மக்களிடம் உரையாற்றவில்லை. உள்துறைச் செயலாளர் ஓர் அறிவிக்கையை மட்டுமே வெளியிட்டார்.
ஊரடங்கு 3.0 என்ன நோக்கங்களுக்காகப் பிறப்பிக்கப்பட்டது என்று விளக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
ஊரடங்கு 3.0 மே 17ஆம் நாள் முடிந்த பிறகு அரசு என்ன செய்யப் போகிறது என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.


இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, இந்திய பொருளாதாரத்தில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களை பற்றி பல்வேறு தொழில் துறையினர், பொருளாதார வல்லுனர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகள் கூறிவரும் வேளையில், ப. சிதம்பரம் அவர்களின் இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.