தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பது ஏன்? சக்கரபாணி

சென்னை:

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பது ஏன்? அதிமுக அரசுக்கு  திமுக கொறடா சக்கரபாணி கேள்வி எழுப்பினார்.

பட்ஜெட் விவாதம் இன்று இரண்டாவது நாளாக தமிழக சட்டத்தில் பரபரப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்எல்ஏவும், கொறடாவுமான சக்கரபாணி, தமிழக அரசை கடுமையாக சாடினார்.

மத்தியஅரசு அமல்படுத்திய நீட் தேர்வால், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த வர்,  ”நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் தமிழக மாணவர்களை வஞ்சித்தபோதும் அவர்களுக்கு இணக்கமாக இருப்பது ஏன் என்று கேள் விடுத்தார்…. தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டு,  நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.