சீனாவின் அடக்குமுறைகளை அம்பலமாக்க ஏன் டிக்டாக் செயலியை பயன்படுத்தும் உய்குர் மக்கள்

டிக்டாக் செயலியின் ஆரம்பம் பற்றி நாம் ஏற்கனவே பத்திரிக்கை.காம் இந்த செய்தியை பதிப்பித்திருக்கிறோம்.

இணைப்பு : https://patrikai.com/tiktok-app-prohibit-its-favourable-or-unfavourable/

டிக்டாக் செயலிஆரம்பிக்கப்பட்டபோது சீனாவில் ஆரம்பிக்கப்பட்டபோது அந்த செயலின் பெயர் டுயின், சீன மொழியில் vibrating sound தமிழில் ஒலி அதிர்வி என்று பொருள்

உண்மையாகவே டுயின் ஆரம்பித்த ஒரு வருடத்தில் அதிரடியான அட்டகாசமான வளர்ச்சி, எப்படிப்பட்ட வளர்ச்சி என்றால் ஒரே வருடத்தில் 100 மில்லியன் பயனாளர்கள், அதாவது 10 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 100 கோடி பேர் இந்த செயலியில் உள்ள காணொளிகளை கண்டுகளித்திருக்கின்றனர். அதன் பின் 2017ல் தான் டுயின் என்ற பெயரை உலக சந்தைக்கு ஏற்றார்போல் டிக்டாக் என்று மாற்றியிருக்கிறார்கள்,

உள்ளூரில் செயல்படும் டிக்டாக் செயலி டுயின் என்ற பெயரில் இன்றும் இருந்துவருகிறது. ஆனால் இது உள்நாட்டில் இருந்து செயல்படும் செயலி. ஆனால் அது சீனாவின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டது.

“அடிப்படையில், அவை ஒரே பயன்பாடாகும் – ஆனால் ஒன்று சீனாவின் முழுமையான சட்டத் திட்டங்களுக்குள் இருக்கிறது, டிக்டாக்கோ பந்நாட்டு அளவில் செயல்படும் செயலி என்பதால் அதன் மீதான தன் ஆதிக்கத்தினை செய்ய முற்பட்டால் வாவே நிறுவனத்திற்கு ஏற்பட்ட கதிதான் டிக்டாக்கிற்கும் நடக்கும் என்பதை சீனா நன்கே உணர்ந்து வைத்திருக்கிறது.

“ஆனால் டிக்டாக்கிற்குள் தணிக்கை நடைபெறக்கூடும் என்பதற்கு இன்னும் பல வழிகள் உண்டென்றாலும்,டிக்டாக்கின் பயனர்கள் தரவு சீனாவிற்கு வெளியே சேமிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் அதை அணுகுவதற்குள் பெரும்பான்மையான காணொளிகள் உலகமெங்கும் பரவிவிடும்’’

இப்போது அப்படித்தான் உய்குர் இன மக்கள் தங்கள் மீதான சீனாவின் கட்டுப்பாட்டை டிக்டாக் வழியே அம்பலப்படுத்திவருகின்றனர் , சீன செயலிகளான வீசாட், டுயின் போன்ற இதர செயலிகளை உய்குர் இன மக்கள் பயன்படுத்தவதில்லை. ஏனெனில் அவை அரசாங்கங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள்

இதுபோன்ற சில காரணங்களால்தான் இந்திய அரசாங்கம் இந்திய பணப்பரிவர்த்தனைகளை இந்தியாவில் சேமிக்கச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனாலும் மாஸ்டர்கார்டு, விசா நிறுவனங்கள் இதை எதிர்த்து குரல் கொடுத்துவருகின்றன.

-செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி