பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற ’முதல்வன்’ படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? ஷங்கர் விளக்கம் வைரல்..

யக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர், அவர் தனது பிரமாண்ட திரைப்படங்களால் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
நடிகர் அர்ஜுன் நடித்த அவர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தில் விஜய்யை நடிக்க வைக்க எண்ணினார் ஷங்கர். ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டார். விஜய் நடிக்க மறுத்தது ஏன் என்பதை இயக் குனர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்


‘முதல்வன்’ படத்திற்காக விஜய்யை நடிக்க ஷங்கர் தனது குரு மற்றும் விஜய் யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தனக்கு தெரிந்தவர் மூலம் அணுகினார், ஆனால் இருதரப்பிலுமான பேச்சு வார்த்தை சரியாக நடக்கவில்லை. பின்னர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் சிறந்த வாய்ப் பை இழந்ததைப் பற்றி கவலைப்பட் டார்.


ஷங்கர் விஜய்யிடம் நேரடையாக பேசி இருக்க வேண்டும் என்று சந்திரசேகர் பின்னர் ஷங்கரிடம் தெரிவித்தாராம். ஆனாலும் பின்னாளில் நண்பன் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்தார். இந்தியன் 2 படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை  ஷங்கர் இயக்க உள்ளாராம்.