பாலா படத்தில் நடித்த போது உருவான தலைவலி முற்றியது: ஷுட்டிங்கை ரத்து செய்த விஷால்..

 

பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் விஷால் ‘ஒன்றரை கண்ணனாக’’ நடித்திருப்பார். அப்போது மிகவும் சிரமப்பட்டு, கருவிழிகளை சுழற்றுவார். அந்த சமயத்தில் அவ்வப்போது அவருக்கு தலைவலி ஏற்படும்.

கொஞ்ச நாட்களாக எந்த வித பாதிப்பும் இல்லை. ஆனால் அண்மைக்காலமாக, விஷால் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களாக அவரால் அறையை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு பயங்கர தலைவலி. இதனால் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஐதராபாத்தில் கடந்த மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் நடந்துள்ளது.
இதில் விஷால் பங்கேற்காததால், படக்குழுவினர், முதல் ஷெட்யூலை பாதியில் முடித்து விட்டு திரும்பியுள்ளனர்.

இப்போது விஷால் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
தலைவலி குணமானதும், தான் இயக்கும் ’துப்பறிவாளன் -2 ‘ படத்தில் நடிக்க உள்ளார்.

அதன் முதல் ஷெட்யூல் முடிந்ததும், ஆனந்த் ஷங்கர் படத்துக்கு தேதி கொடுப்பார் என தெரிகிறது.

– பா.பாரதி