பண மதிப்பிழப்பு ஏன் அமல்படுத்தப்பட்டது? நிர்மலா சீத்தாராமன் விளக்கம்

சென்னை,

ண மதிப்பிழப்பு  அறிவித்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், அதற்கு  எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், இன்றைய தினத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கறுப்பு தினமாக அனுசரித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ஆனால், அதே நேரத்தில் இன்றைய தினத்தை கறுப்பு பண ஒழிப்பு தினமாக மத்திய பாஜக அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில்  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

கறுப்பு பணத்தை ஒழிப்பதாக 2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜக உறுதியளித்திருந்தது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கிலேயே பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கறுப்புப் பண ஒழிப்பு குறித்த தெளிவான விவரங்களை தெரிவிக்காவிட்டாலும் அதை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து திட்டவட்டமாக மேற்கொள்வோம். அதன் ஒரு பகுதியாகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

மேலும், 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வெளியான சர்வதேச ஆடிட்டிங் ஃபண்ட்ஸின் அறிக்கையின்படி, சர்வதேச அளவில் கணக்கில் காட்டாமல் பதுக்கப்பட்டுள்ள பணத்தில் பெரும்பாலானவை உயர் மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாகவே  உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

அதேபோல, ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்வதன் விளைவாக யார், எங்கு, எதை, எவ்வளவிற்கு வாங்கி னார்கள் என்பது கணக்கு காட்டப்படாமல், அதிகாரப்பூர்வமாக பதிவிடப்படாமல் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டது. இதனால் அந்த பணத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் அரசால் வரி வசூலிக்க முடியாது. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

வெளிப்படையான பரிவர்த்தனைகளின் மூலமாகவே அனைத்து வகையான கொடுக்கல், வாங்கல் பரிவர்த்தனை களும் கணக்கில் வரும். அதற்காகவே பணமதிப்புநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டது.

இந்தியாவில் 2015-ம் ஆண்டுவரை 86% பண பரிவர்த்தனைகள் ரொக்கப் பரிவர்த்தனையாகவே மேற்கொள்ளப் பட்டது.

இதுமாதிரியான முறையற்ற பொருளாதாரத்தால் நாட்டிற்கு எந்தவிதமான பலனும் பலமும் கிடையாது.

அனைத்துவகையான பரிவர்த்தனைகளையும் வங்கி மூலமாக கணக்கில் கொண்டுவருவதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பயங்கரவாதிகளின் பயங்கரவாத செயல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

2015-ல் ஜம்மு காஷ்மீரில் 4000-க்கும் அதிகமாக இருந்த கல்லெறி சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால்,  தற்போது நூற்றுக்கணக்கில் தான் உள்ளன. அந்தளவிற்கு வன்முறை சம்பவங்களும் பயங்கரவாத தாக்குதல்களும் குறைந்துள்ளன.

பணமதிப்புநீக்க நடவடிக்கையால் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் வாங்க முடியவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டதன் விளைவாக அவரகளால் ஆயுதங்கள் வாங்க முடியவில்ல. இதே ரொக்கப்பரிவர்த்தனையாக இருந்தால், அவர்கள் எளிதில் ஆயுதங்களை வாங்கிவிடுவர் என்று கோடிட்டு காட்டினார்.

கறுப்புப் பண ஒழிப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது போன்ற காரணங்களுக்காகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

மேலும், மத்திய அரசின் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்றும்,  வருமானத்திற்கு அதிகமான பணம் இருக்குமேயானல் அதுகுறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

You may have missed