சபரிமலை வந்த கவிதா மற்றும் இஸ்லாமிய பெண் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்? கேரள அமைச்சர் விளக்கம்

பம்பா:

ச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக சபரி மலைக்கு பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பெண் பத்திரிகையாளர் உடன் மற்றொரு பெண்ணும் காவல்துறை பாதுகாப்புடன் சன்னிதானம் பகுதிவரை வந்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சன்னிதானம் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து உள்ளே நுழைய அனுமதி மறுத்து வருகின்றனர்.

பரபரப்பான இந்த சூழலில், இரண்டு பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டாம் என திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, 2 பெண்ளையும் திருப்ப அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுடன் கேரள ஐ.ஜி. பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், பெண்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து, கேரள அமைச்சர் கடக்கம் பள்ளி சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,  கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர, போராட்ட எண்ண முடையவர்களை அனுமதிப்பதல்ல. போராட்ட உணர்வை வெளிப்படுத்துவதற்கான இடம் சபரிமலை அல்ல.

அந்த இரு பெண்களுள் ஒருவர் செய்தியாளர், மற்றொருவர் ரஹானா பாத்திமா. இவர் போராட்ட எண்ணமுடையவர், இது லட்சக்கணக்ககான பக்தர்களின் உணர்வை  பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

திருப்பி அனுப்பட்ட இருவரில் ஒரு கவர் ஐதராபாத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா என்றும், மற்றொருவரான ரஹானா பாத்திமா பெண்ணியவாதி என்றும் கூறப்படுகிறது.