நக்கீரன் கோபால் கைதின் போது, நீதிமன்றத்தில் இந்து ராம் பேச நீதிபதி அனுமதித்தது ஏன்? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை:

ளுநர் பன்வாரிலால் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் ஆ4ராகி வாதாடினார். அதைத் தொடர்ந்து கோபால் விடுவிக்கப்பட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராம் வாதாடியது குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து,  நக்கீரன் கோபால் கைதின் போது, பதிமூன்றாவது நடுவர் நீதிமன்றத்தில் இந்து ராம் பேச நீதிபதி அனுமதித்தது ஏன்? எந்த சட்டத்தின் அடிப்படையில் அவர் பேச அனுமதித்தார் என்பது குறித்து வரும் 28-ம் தேதிக்குள் மாஜிஸ்திரேட் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நக்கீரன் இதழில் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து நக்கீரன் இதழில் தொடர்  கட்டுரை வெளியாகி வருகிறது. இதில் ஆளுநரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக,ஆளுநர் தரப்பின் புகார் காரணமாக, கோபால் கடந்த மாதம் 6ந்தேதி  புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது தமிழக காவல்துறையின ரால்  கைது செய்யப்பட்டார்.  அவர்மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அன்று மாலை அல்லிக்குளம் எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது ‘ நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தில், 124 பிரிவு சட்டத்தின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், பிரசுரித்த கட்டுரையில் ஆளுநரை எந்த வகையிலும் கோபால் மிரட்டவில்லை என்றும் கட்டுரை மூலம் ஆளுநர் பணியில் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாதம் செய்தார்.

அதைத்தொடர்ந்து,  ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் ஊடகத் தரப்பாக ஆஜராகி வாதாடினார். இதையடுத்து குற்றவியல் நடுவர் கோபிநாத் பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது என மறுத்தார். இதை அடுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.