டில்லி,

நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் தோறும் வைபை வசதி ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் கிராமங்கள் வைபை வசதி பெறும் கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் 5.5லட்சம் கிராமங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மோடி அறிவித்துள்ள டிஜிட்டல் இந்தியாவின் புரட்சி காரணமாக இந்த வளர்ச்சியை ஏற்படுத்தி மத்திய அரசும் முயன்று வருகிறது. தற்போது  அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், கிராமத்தின்ரும் பயன்பெறும் வகையில் வைபை புரட்சி ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கிராமங்களிலும்  டிஜிட்டல் பணபரித்தனை போன்ற பல்வேறு செயல்களை விரைவில் செயல்படுத்த இது பேருதவியாக இருக்கும் என்றும் , இந்த வைபை வசதி மூலம் கிராம மக்கள் தங்கள் செல்போன்களில் இன்டர்நெட் வசதியை இலவசமாக பெற முடியும்.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு டிஜிட்டல் வில்லேஜ் என பெயரிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர்  ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு டிஜிட்டல் கிராமங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இந்தாண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இந்தாண்டு இறுதிக்குள் வைஃபை வசதி தரப்படும் என தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.

இணையதள இணைப்பின் வேகம் நொடிக்கு 1 gbps என்ற அளவில் இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.