Random image

இந்தியாவில் 710 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி: பியூஸ் கோயல்

டில்லி:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சுமார் 710 ரயில் நிலையில் வைபை வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

டில்லியில் நடைபெற்ற  நவீனமயமாக மாற்றுவது குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு இந்தியாவில் உள்ள சுமார் 710 ரயில் நிலையங்களில் இனி இலவச வைபை வசதியை பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

‘ஸ்மார்ட் ரயில்வே’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய பியூஸ் கோயல், தகவல் தொழில்நுட்பத்தின் நவீன அம்சங்களை பயணிகளுக்கு கிடைக்கச் செய்வதில் ரயில்வே ஆர்வம் கொண்டிருக்கிறது. ரயில்களில் நேரத்தை கடைபிடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஏப்ரல் முதல் இப்போது வரை ரயில்களின் நேர இயக்கம் 74 சதவிகிதம் வரை மேம்பட்டுள்ளது.

ரயில் இன்ஜின்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, ரயில் சென்று கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், அடுத்த 6 மாதங்கள் முதல் 8 மாதங்களில் கூடுதலாக 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி கொண்டு வரப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

தற்போது  ரயில் நிலையங்களில் வழங்கப்படும் காகித டிக்கெட்-களை காகிதம் இல்லாமல் புதிய வகையிலான பயண சீட்டுகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறியவர்,  இந்தியாவில் உள்ள சுமார் 710 ரயில் நிலையங் களில் இனி இலவச வைபை வசதியை பெறலாம் என்றார்.

ரெயில்-ஓயர் என்ற குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் கிடைக்கப் பெறும் இந்த வைபை , ஒரு பயனருக்கு சுமார் 30 நிமிடங்கள் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும். இந்த அதிவேக இணைய சேவை மூலம் 350 எம்.பி டேட்டா-வை நுகர முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.