சென்னை:

சென்னை, விழுப்புரம், நாகை மாவட்டங்களி்ல் இன்று மாலை பரவலாக மழை பெய்தது.

 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்திருந்தது.

சென்னை சுற்றுப்புறத்தில்  குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.

நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை,வைத்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலகா அரை மணி நேரத்துக்கு மேல்  மழை பெய்தது.

வேலுார் மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது.

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு, முக்கேரி, அனுமந்தை ஆகிய கிராமங்களில் மழை பெய்தது.