இஸ்லாமாபாத்:

உளவு பார்த்ததாக முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் குல்பூஷணை வரும் 25ம் தேதி அவரது மனைவி மற்றும் தாயார் சந்தித்து பேச பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் இத்தகவலை வெளியிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்திய தூதரக அதிகாரிகளும் உடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது.