விபத்தில் மனைவி மரணம்! உடலைப் பார்த்த அதிர்ச்சியில் கணவரும் மரணம்!

விபத்தில் மனைவி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட, உடலைப் பார்த்த அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம் சிறுமுகையில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமுகையில் வசித்து வந்தவர்கள் சண்முகம் (வயது 65)  – பாலாமணி (வயது 58) தம்பதி.  சண்முகம் சவுத் இண்டியன் விஸ்கோஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.  அந்நிறுவனம் மூடப்பட்டதும சிறுமுகையிலேயே வசித்து வந்தார்.

இவர்களது மகன் ஜெர்மனியில் பணிபுரிகிறார்.

இந்த நிலையில் இன்று சாலை இருசக்கரவாகனத்தில் தனது மாமியார் மாராத்தாளுடன் அன்னூர் வந்தார்.பாலாமணி.  அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மாராத்தாள் கால்களில் முறிவு ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுமுகையில் இருந்த பாலாமணியின் கணவர் சண்முகத்திடம் அவரது மனைவி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டது. இதனால் பதட்டமடைந்தாலு்,  மனைவி உயிரோடுதான் இருக்கிறார் என்ற சிறு நிம்மதியோடு மருத்துவமனை சென்ற சண்முகத்துக்கு, மனைவியை சடலமாக பார்த்ததும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும்  சண்முகம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கணவர் மனைவி இருவரும் மரணமடைந்த சம்பவம் சிறுமுகை பகுதயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.