கொரோனா மருந்து என கணவருக்கு தூக்க மாத்திரை அளித்து நகைகளை கொள்ளை அடித்த மனைவி

தூத்துக்குடி

ணவருக்கு கொரோனா மருந்து எனக் கூறி தூக்க மாத்திரை அளித்து 100 சவரன் நகைகளை ஒரு மனைவி கொள்ளை அடித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள தாளமுத்து நகர் அருகே பெரியசெல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் சவேரியார் பிச்சை. வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.    இவர் தனது மனைவி ஜான்சிராணியுடன் தனியே வசித்து வந்தார். தந்து, வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல்,  கஞ்சத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையொட்டி பணத்தேவையை பூர்த்தி செய்ய வீட்டிலிருக்கும் நகைகளையே திருட அவரது மனைவி ஜான்சிராணி முடிவெடுத்ததாகத் தெரிகிறது.   தற்போது நாள் முழுவதும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் கணவரை எப்படி ஏமாற்றலாம் என யோசித்தபோதுதான், ஜான்சி ராணியின் கண் எதிரே தோன்றியது, கொரோனா.

அவர் கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி தூக்க மாத்திரை கலந்த கசாயத்தை கணவர் வின்சென்ட்க்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.    இதனால் வின்சென்ட் மயங்கி ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல, அந்த தருணத்தைப் பயன்படுத்தி 100 சவரன் நகைகளை திருடி, அதனை வீட்டின் அருகேயே ஜான்சிராணி புதைத்துள்ளார்

அத்துடன் காவல்துறையினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கொள்ளை நடந்த வீடு போன்று பொருட்களை எல்லாம் கலைத்தும் அந்தப்பெண் போட்டுள்ளார்.

வின்சென்ட் கண் விழித்துப் பார்த்தபோது நகைகள் களவு போனது போல நாடகமாடி, அவரையும் நம்பவைத்ததுடன் தாளமுத்து நகர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.   விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு, ஒரு கட்டத்தில் ஜான்சிராணி மீதே சந்தேகம் எழ, அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.

தீவிர விசாரணையில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்ட ஜான்சிராணி கைது செய்யப்பட்டார்.  தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா கை கொடுத்துள்ளது.  ஆம் அவர் கொரோனா அச்சுறுத்தலால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.