மதுரை ஜவுளிக்கடை தீவிபத்தில் பலியான வீரரின் மனைவி தற்கொலை!

மதுரை: மதுரை ஜவுளிக்கடை தீவிபத்தில் பலியான தீயணைப்பு வீரரின் மனைவி தற்கொலை செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை  தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் கடந்த நவம்பர் மாதம் 14ந்தேதி நள்ளிரவில் பயங்கர  தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து  தகவல் அறிந்த தீயப்பு வீரர்கள சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். அப்போது, அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இதில், கட்டி இடிபாடுகளுக்குள் சிக்கி தீயில் கருவி, தீயணைப்பு வீரர்கள், சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். தீபாவளியன்று  இந்த சம்பவம் நடைபெற்றது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தீ விபத்தில் இறந்த வீரர் ஒருவரின் மனைவி அங்கையற்கண்ணி என்பவர் திடீர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கணவர் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்த நிலையில், அங்கையற்கண்ணி குழந்தைகளை பரிதவிக்க விட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவரது  குடும்பத்தினரையும், தீயணைப்பு வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சோக சம்பவம் குறித்து  நாகமலைப்புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.