கருப்பாக உள்ளதாக சொன்ன கணவன் முகத்தில் வெந்நீரை வீசிய மனைவி

சென்னை

ன்னை கருப்பாக இருப்பதாக குடிபோதையில் கூறிய கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஒரு மனைவி ஊற்றி உள்ளார்.

சென்னை புறநகர் பல்லாவரத்தை அடுத்து உள்ளது பொழிச்சலூர். இங்கு சியாம்வெஸ்லி மற்றும் அவர் மனைவி கிறிஸ்டி ஆகியோர் வசித்து வருகின்றனர். சுமார் 36 வயதான சியாம்வெஸ்லிக்கும் 34 வயதாகும் கிறிஸ்டிக்கும் 15 வருடங்கள் முன்பு திருமணம் நடந்துள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ள சியாம்வெஸ்லி தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை இடுவது வழக்கமாகும்.

முதலில் சாதாரணமாக இருந்த சண்டை தற்போது தீவிரமாகி உள்ளது. சியாம் வெஸ்லி  சமீபகலமாக கிறிஸ்டி அழகாக இல்லை எனவும் கருப்பாக உள்ளதாகவும் கூற ஆரம்பித்துள்ளார். அத்துடன் தாம் கிறிஸ்டியை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும் கூற ஆரம்பித்துள்ளார்.

நேற்று குடித்து விட்டு வந்த சியாம்வெஸ்லி மது போதையில் கிறிஸ்டியை கருப்பானவர் எனவும் அழகில்லாதவர் எனவும் கூறி சண்டைக்கு இழுத்துள்ளார். இதைக் கேட்ட கிறிஸ்டி மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து கணவன் முகத்தில் வீசி உள்ளார். சியாம் வெஸ்லியின் முகம் வெந்து போகவே அவர் அலற ஆரம்பித்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அலறல் கேட்டு ஓடி வந்து அவரை சென்னை குரோம்பேட்டை அரௌ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.