லண்டன்:

மெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்த விக்கி லீக்ஸ்  நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே. அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை ஹேக் செய்து,  ‘Vault 7’ என்ற பெயரில், 8 ஆயிரத்து 761 ஆவணங்களை  கடந்த 2010ஆம் ஆண்டு அசாஞ்சே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா கொலை வெறியில் தேடியது.

இதையடுத்து தலைமறைவான அசாஞ்சே  வெளிநாடுகளில் தலை மறைவாக வாழ்ந்து  வந்தார். சமீபத்தில் ஈக்வடார் நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டதாகவும், பின்னர் அதை வாபஸ் பெற்றதாகவும் தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏப்ரல் ஏப்ரல் 11ந்தேதி  லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. . ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில்அவரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அமெரிக்கா சார்பில் இங்கிலாந்து அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.  இந்த நிலையில்,  கணினி தரவுகளை ஹேக் செய்த புகாரில் விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த ஒப்புதல் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இரு தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.