கோவை,

கோயமுத்தூர் அருகே உள்ள போத்தனூர் பகுதியில் காட்டுயானை தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றித் திரிகிறது. இதை காட்டுக்கள் விரட்ட கோரி அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், போத்தனூர்  அருகே உள்ள  கணேசபுரத்தில் இன்று அதிகாலை சுமார் காலை 6 மணி அளவில் வீட்டிற்கு வெளியே படுத்திருந்தவர்களை மிதித்தும், தும்பிக்கையால் தாக்கியும் அடித்து கொன்றது.

யானையின் தாக்குதலுக்கு  ஒரு சிறுமி மற்றும் மூதாட்டி உள்பட மேலும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்ற ஜோதி, நாகரத்தினம் ஆகிய 2 பேரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதி மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்து வருகின்றனர்.  யானையை பிடிப்பதற்காக  4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

காட்டு யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் மற்றும் போலீசார் குழு போத்தனூரில் முகாமிட்டுள்ளது.