குரங்கணி காட்டுத்தீ: பலியானவர்களுக்கு கமல்ஹாசன் இரங்கல் டுவிட்

சென்னை:

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பதிவில்,

குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி