ஏற்காடு மலை பகுதிகளில் கடுமையான காட்டு தீ…. போக்குவரத்து பாதிப்பு

சேலம்:

சேலம் அருகே ஏற்காடு மலை பகுதிகளில் கடுமையான காட்டு தீ பரவி வருகிறது. இதன் காரணமாக  மலை பாதை முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல ஈரோடு அருகே நேற்று முதல் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. ‘தீயை அணைக் தீயணைப்பு துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  சத்தியமங்கலம் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் அருகே இக்கலூர் வனம்  உள்ளது. இந்த பகுதி மலையின் உச்சிப்பகுதியில் உள்ளது. இங்கு அடர்ந்த மரங்கள் உள்பட  ஏராளமான வனவிலங்கு களும் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயில் தொடங்கியதையொட்டியும் மழை பொழிவு இல்லாததாலும் வனப்பகுதி காய்ந்து தீப்பற்றி உள்ளது. காடுகளில் உள்ள மரங்களிலும் தீ பற்றியுள்ளதால்,  தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

மலை உச்சியில் தீ பிடித்து எரிவதால் மேலே செல்லவும் வழியில்லை. தீயை அணைக்க மலை உச்சிக்கு போக முடியாமல் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து கூறியுள்ள வனத்துறையினர், வனப்பகுதியில் பிடிக்கும் தீயை தண்ணீர் ஊற்றியும் செடி, கொடி தழைகளை வெட்டி போட்டும் அணைப்போம். ஆனால் இக்கலூர் பகுதி மலை உச்சியில் இருப்பதால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடநத் 2 நாட்களாக தீ எரிந்த வருவதால், அந்த பகுதியில் வசித்து வந்த விலங்குகள் பறவைகள் பலியாகி இருக்க வாய்ப்பு உண்டு என்றவர், தீயை விரைவில் கட்டுப்படுத்துவிடுவோம் என்று கூறி உள்ளனர்.

தற்போது பல இடங்கிளல் காட்டுத்தீ பரவி வருகிறது. ஏற்காடு மலைப்பகுதியில் பிடித்துள்ள காட்டுத் தீ காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து முடங்கி உளளது. இதேபோல தாளவாடி வனப்பகுதி ஜீரேகள்ளி வனத்திலும் நேற்று இரவு தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த பகுதிக்கு வனஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பட உதவி: நெப்போலியன்