18எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்படுவார்களா? ஐகோர்ட்டு கேள்வி

சென்னை,

முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படுமா என்று கேள்வி எழுப்பி உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 18எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் கவர்னரை சந்தித்து, எடப்பாடி மீது நம்பிக்கையில்லை, அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், கவர்னர் அவர்களது கோரிக்கையை ஏற்கவில்லை.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில்,  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகுமா என்பது குறித்து   அரசின் முடிவை தெரிவிக்குமாறு அரசு தரப்பு தலைமை வழக்கறிஞருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அதிமுக கொறடா பரிந்துரையின்பேரில், சபாநாயகர் விதித்த கெடு இன்றுடன் முடிவடைவதால், ஐகோர்ட்டு விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பி உள்ளது.