டெல்லி:

நாட்டின் 28வது ராணுவ தளபதியாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி பதவி ஏற்றுள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்று முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  நமது  எந்த சவாலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆக்கிரமித்து காஷ்மீரை பாகிஸ்தானிடம் இருநிது மீட்கவும் தயாராக உள்ளது என்று கூறினார்.

முன்னாள் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற நிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதியாக  லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே  பொறுப்பேற்றார். இந்த நிலையில், இன்று
செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது பலமாக உள்ளதாகவும், நமது ராணுவத்தை பொறுத்தவரை, அது இந்திய அரசியலமைப்பிற்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் என்றார் .

ராணுவத்தினர் இந்திய  அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு வழிகாட்டலாக இருக்கும் என்றும்,  எந்த நேரத்தில், எந்த வடிவத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறிய அவர்,  வீரர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல;  தரமே இந்திய ராணுவத்தின் தாரக மந்திரம் என்றார்.

பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டது போன்ற காட்டுமிராண்டித்தன மான செயல்களை ராணுவம் பொறுத்துக் கொள்ளாது என அவர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தவர், அரசு உத்தரவிட்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மீட்டெடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.