இந்தியா மீதும் வர்த்தக தடையா? 29 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்தியது இந்தியா!

டில்லி:

29 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரியை இந்தியா உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா மீது கோபத்தில் உள்ள அமெரிக்கா, சீனாவைப்போல இந்தியா மீதும் வர்த்தக தடை விதிக்க முயற்சி செய்யுமோ என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

இஇந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு மற்றும் அலுமினியத்திற்கும் அமெரிக்கா வரிகளை விதித்து வரும் நிலையில், அதற்கு  பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், பாதம் பருப்பு, வால்நட், அக்ரூட் பருப்புகள் போன்ற 29 பொருட்கள் மீதான வரி விதிப்பை இந்தியா அதிகரித்து உள்ளது. இந்த வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கனேவே  இந்தியப் பொருட்கள் வரி விலக்கு பெற உதவிய, வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்ததால், இந்தியா இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இந்தியாவின் வரி உயர்வை,  301ஆவது பிரிவின் கீழ் அமெரிக்க வர்த்தகத் துறை விசாரணை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரி விதிப்பு குறித்து இரு நாட்டு அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் முடிவு எடுக்காததால் இந்த வரி உயர்வு அமல்படுத்தப்படுவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..

ஏற்கனவே அமெரிக்கா  சீனாவுக்கு எதிராக வர்த்தக போரை ஏவிவிட்டுள்ள நிலையில், இந்தியா மீது கடும் கோபத்தில் உள்ள டிரம்ப், இந்தியாவுக்கு எதிராகவும் வர்த்தக போதை நடத்துவரா என்பது குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்துவருகின்றன.

ஆனால், இப்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமெரிக்கா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க வர்த்தக சட்டத்தின் 301ஆவது பிரிவின் கீழ்,  வர்த்தக ஒப்பந்தம் மீறப்படுகிறதா, அமெரிக்க வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறதா  என்பது குறித்து  விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் இந்தியாவின் சுங்க வரி உயர்வு அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும் அமெரிக்க வர்த்தகத்துறை அலுவலகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.