திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகுமா ரஜினியின் ‘அண்ணாத்த’….?

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது .

இப்படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனால் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகாது என்று செய்திகள் வெளியானது.

சென்ற மாதம் அண்ணாத்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .
கொரோனா நிலவரம் சரியாகி மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பினாலும் தியேட்டர்கள் திறக்க தாமதம் ஆகும் என்பதால் மீண்டும் அண்ணாத்த படம் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதுவரை சுமார் 45% படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது.பொங்கல் வெளியீடும் சாத்தியமில்லை என்கிறார்கள். ஏனென்றால் கொரோனா முழுமையாக இல்லாமல் போனவுடன்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிந்து, படப்பிடிப்பு தொடங்கி, அனைத்துப் பணிகளும் முடியத் தாமதமாகும் என்பதால் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்கிறார்கள் படக்குழுவினர்.

கார்ட்டூன் கேலரி