எம் ஜி ஆரின் சின்னத்தில் நம்பியாருக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் : தினகரன் கிண்டல்

சென்னை

எம் ஜி ஆரின் சின்னத்தில் நம்பியாருக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் என தினகரன் கேட்டுள்ளார்.

ஆர் கே நகர் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் சராசரியாக 5000 ஓட்டுக்கள் பெற்று முன்னணியில் டிடிவி தினகரன் உள்ளார்.  அதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.   அப்போது ஒரு செய்தியாளர் அவரிடம் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு தினகரன், “இரட்டை இலை எம் ஜி ஆர் மற்றும் அம்மாவிடம் இருந்தால் மட்டுமே அதை மக்கள் மதிப்பார்கள்.   எம் ஜி ஆரின் சின்னத்தில் நின்றால் மட்டும் நம்பியாருக்கு யார் ஓட்டுப் போடுவார்கள்?” என  பதில் கேள்வி எழுப்பினார்.